விகாரையில் திருட்டு விசாரணைகள் ஆரம்பம்!!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் கூரை மேல் ஏறி கனணி, மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைபாட்டினை இன்று (22) கந்தளாய், 94ம் கட்டை - சைலாறாம விகாரையின் விகாராதிபதி அஸ்கிரிய புஞ்யரத்ன தேரர் பதிவு செய்துள்ளார்.
விகாரையின் கூரை மேல் ஏறி ஒரு இலட்சத்தி 23,000 ரூபாய் பணத்தையும் மடிக்கணனி ஒன்றினையும் திருடிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 எனும் இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த சொக்கோ பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக , குறித்த இடத்தை பகுப்பாய்வு செய்யும் நோக்கில் அடையாளங்களை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

