சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி நபரொருவர் மரணம் !!
அரலகங்வில, களுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள வயல் வெளியில் நேற்று (20) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, குறித்த வயல் வெளியில் சட்டவிரோதமாக மின் இணைப்பு வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதேயிடத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.