Header Ads

Breaking News
recent

தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி !!


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (26ஆம்) திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில் க. பொ. த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் இவர் குடும்பத்தில் கஷ்ட நிலை காரணமாக விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில் மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார். 

16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது மரத்தின் கிளை தன் மீது விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எஸ். எம். றூமி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார். 

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

Powered by Blogger.