Header Ads

Breaking News
recent

வீதி விபத்தில் திருகோணமலை ஊடகவியலாளர் பலி - மட்டக்களப்பில் சம்பவம் !

(S.Tபிரணவன்)
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன்,  உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்  மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். 

தனியார் ஊடகநிறுவனத்தில் பணியாற்றிவரும், திருகோணமலை உட்துறைமுக   வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது சம்பவதினமான இன்று பகல் 2 மணியளவில் பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில், நிறுத்திய போது  பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைதார்.

இந்நிலையில் படுகாயமடைந்த ஊடகவியலாளரை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உழவு இயந்திர சாரதியை  கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனா்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் MAX தமிழ் மீடியா குழுமம்.

Powered by Blogger.