Header Ads

Breaking News
recent

அழகு நிலையங்கள் மற்றும் முடிவெட்டும் நிலையங்ளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி!!

(முஸம்மில்)
அழகு நிலையங்கள் மற்றும் முடிவெட்டும் நிலையங்களை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சினால் இன்றைய தினம் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான அறிவுறுத்தல்களை eohfs.health.gov.lk எனும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், குறித்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் அழகு நிலையங்கள் மற்றும் முடிவெட்டும் நிலையங்களை திறப்பதற்கான விண்ணப்பங்களை health.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அழகு நிலையங்கள் மற்றும் முடிவெட்டும் நிலையங்ளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Powered by Blogger.