Header Ads

Breaking News
recent

சட்டவிரோத சாராய பாேத்தல்களுடன் நபரொருவர் கைது !!

(எஸ்.டீ.பிரணவன்)
அல்லைபிட்டியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அல்லையூர் ராசா என்பவர் 28  சாராயப் பாேத்தல்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.  

அல்லைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக பொதுக்கள்,பொதுஅமைப்புக்களின் எதிர்ப்புக்களை மீறி சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டு  வந்த குறித்த நபர் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி S.I திரு விவேகானந்தன் தலமையிலான  பொலிஸ் குழுவினரால் நேற்று  கைது செய்ய முற்பட்டபாேது அவ்விடத்தில் உள்ள பெருமளவு பெண்கள் அவரை கைது செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பெருமளவு பொலிசார் வரவழைக்கப்பட்டு குறித்த நபர் 28 முழு சாராயப்பாேத்தல்களுடன்  கைதுசெய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டதால் பெருமளவு வழக்குகள் நடைபெற்று வருகின்றது. அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் 5வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.