Header Ads

Breaking News
recent

பல கொரோனா PCR சோதனைகளில் தவறு - அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் (SLAGMLT)

(MUAADH MARZOOK)
05ம் திகதி மரணித்த முஸ்லீம் ( 52 வயது குரோனா என எரிக்க பட்ட ஜனாசா) பெண்ணுக்கு நடத்தப்பட்ட கெரோனா பரிசோதனையில் தவறு. சுகாதார அமைச்சின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட மருபரிசோதனையில் கொரோனா இல்லை எனவும் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தவரானது என்றும்  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். எனும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளமை குறித்து தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை அவ்வாறான தவறான மருத்துவ அறிக்கைகள் 13 வரை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு கூட பரிசோதக நிபுணர்கள் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடத்திலிருந்து அவ்வாறான தவறான அறிக்கைகள் 8, கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்திலிருந்து கடந்த 5 ஆம் திகதி வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகள் 4 கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரி ஆய்வு கூடத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு மருத்துவ அறிக்கையும் தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள எந்த ஆய்வு கூடத்திலிருந்தும் தவறான அறிக்கைகள் கொடுக்கப்படவில்லை எனவும், மேற்படி தவறான அறிக்கைகள், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆய்வு கூடங்களில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக பரிசோதனைகளின் போதே கண்டறியப்பட்டு திருத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் மருத்துவ பரிசோதக நிபுணர்கள் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், கடந்த 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது. தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையின் தாதி, கொலன்னாவை – சாலமுல்ல மற்றும் ராஜகிரிய பண்டாரநாயக்கபுர, மோதரை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பபட்டிருந்தது.

இந்நிலையில், அந்த அறிக்கைகள் குறித்து நாம், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பரிசோதனை மையங்களில் ஆய்வு செய்தபோது, கொரோனா உள்ளதாக கூறி கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் தவறுகள் உள்ளமை கண்டறியப்பட்டது.

ஏற்கனவே எமது கண்காணிப்புக்கு உட்பட்ட விடயம் தான், ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடம் ஊடாக 8 தவறான அறிக்கைகள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளமை . கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்தினால் வழங்கப்பட்ட அந்த 4 அறிக்கைகள் கூட தவறானது என உறுதியாகியுள்ளன.

அதே போல் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை கூட தவறானது என்பது உறுதியாகியுள்ளது.

இதன்படி 13 தவறான மருத்துவ அறிக்கைகள் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளன. இதனால் மக்களுக்கு மருத்துவ ஆய்வு அறிக்கைகள், மருத்துவ பரிசோதனையாளர்கள் தொடர்பிலான நம்பிக்கையில் கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக கூறுகின்றேன். சுகாதார அமைச்சின் கீழுள்ள எந்த மருத்துவ ஆய்வு கூடத்திலும் இதுவரை தவறான மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கபபடவில்லை. சுகாதார அமைச்சின் கீழ் 10 மருத்துவ பரிசோதனை கூடங்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கவென தனியாக உள்ளன. அவற்றில் சேவையாற்ற எந்த சந்தச் சந்தர்ப்பத்திலும் 200 மருத்துவ பரிசோதகர்கள் தயாராக உள்ளார்கள்.

அவ்வாறான பின்னணியில், இவ்வாறான தொற்று பரவல் சூழலில், ஆய்வுகள் குறித்து சரியான நடவடிக்கைகள் தேவை. அந்தப் பொறுப்பை சரிவர செய்யாத, இந்த தொற்றை கட்டுப்படுத்தும் பொறப்பில் உள்ள நிபுணர்கள், பணிப்பாளர்கள் தொடர்பில் கடமையை சரிவர செய்யாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியை கோருகிறோம். ‘ என்றார்.













Powered by Blogger.