Header Ads

Breaking News
recent

171 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..

லெபனானிலிருந்து 171 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, நியூசிலாந்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 88 பேர் நேற்றிரவு 7.30 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து 168 இலங்கையர்களை ஏற்றிய விமானமொன்று மத்தளை விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.