Header Ads

Breaking News
recent

முல்லைத்தீவில் 25 வயது இளைஞன் ஒருவர் பயங்கவாத குற்றச்சாட்டில் கைது!

(வவுனியா சஜாத்)
முல்லைத்தீவு கேப்பாபபிலவு கிராமத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் நேற்று இரவு இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினை ஊக்கிவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த ''நவரத்தினம் டிலக்சன்'' என்ற இளைஞரே விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் இவரை கைதுசெய்வதற்கான ''ஆவணத்தினை வழங்கிவிட்டு கைதுசெய்து'' விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.