60 குடும்பங்களுக்கான பால்மா உலர்உணவு மற்றும் மதிய உணவு வழங்கிவைப்பு !!
(பிராந்திய நிருபர் ஸஹ்ரா)
யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகத்தினால் 60 குடும்பங்களுக்கான பால்மா மற்றும் உலர்உணவுப்பொதிகளும் சிறுவர்களுக்கு மதிய உணவு விருந்தும் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகத்தினால் 60 குடும்பங்களுக்கான பால்மா மற்றும் உலர்உணவுப்பொதிகளும் சிறுவர்களுக்கு மதிய உணவு விருந்தும் வழங்கப்பட்டது.
பேரிடர்கால Covid-19 கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு உலகமே முடக்கப்பட்ட வேளையில் எம் நாட்டு மக்களும் பல சவால்களை எதிர்கொண்டு இருந்தார்கள் .
ஊரடங்கு நீக்கப்பட்ட வேளையிலும் வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புற்று இருக்கின்ற வகையில்.
யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகத்தால் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகள் உதவித் திட்டங்கள் கட்டம் கட்டமாக வடக்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இவ் அமைப்பின் 40 வது கொரோனா நிவாரணப்பணியாக கிளிநொச்சி மாவட்டம் நாச்சிகுடா பிரதேசம் அன்னை வேளாங்கன்னி கிராமத்தில் அமைந்துள்ள நெய்தல் முத்துக்கள் சிறுவர் கழகத்தில் கல்வி பயிலும் 70 சிறுவர்களை கொண்ட 60 குடும்பங்களுக்கு. கேகேபி இளைஞர் கழகத்தினால் சுகாதாரமான முறையில் உலர் உணவுப்பொதிகளும் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவு விருந்தும். சமூக சேவையாளரான திரு.ஜது அவர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பின் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விலே இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழக தலைவருமான திரு. சந்தோஷ் மற்றும் சமூக சேவையாளர் கௌரவ கலாநிதி சுதாகரன், சமூக சேவையாளர் திரு.அலன் மற்றும் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


