Header Ads

Breaking News
recent

அனுமதிப்பத்திரத்தை மீறியோருக்கு வழக்கு!!

(அப்துல்சலாம் யாசீம்)
சட்ட விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற லொறி சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பொலிஸார் நேற்றிரவு (09) மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவலி கங்கையில் இருந்து கொழும்பிற்கு லொறியில் மணல் ஏற்றிச் சென்றபோது அனுமதிப் பத்திரத்தில் வழங்கப்பட்டிருந்த கோட்பாடுகளை பின்பற்றாது தனக்கு ஏற்ற விதத்தில் பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் விதத்தில் மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதனடிப்படையில் டிப்பர் வாகனங்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட லொரி மற்றும் லொறியின் சாரதிகளை இன்றையதினம் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லொறி சாரதிகளுக்கு மணல் ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்து உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.