Header Ads

Breaking News
recent

வீதிக்கடவையில் ஏற்றப்பட்ட விபத்தில் ஒருவர் பலி!!!



பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.வடக்கம்பரை – பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பஸ்ஸே விபத்துக்குள்ளாகியது.சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Powered by Blogger.