Header Ads

Breaking News
recent

இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஜனவரி 10 தொடக்கம் 11 வரையான காலப்பகுதியில் இந்த ஆண்டின் முதல் கிரகணமாக சந்திரகிரகணம் தோன்றியது.

இந்நிலையில் தெளிவற்ற சந்திர கிரகணம் இன்று வெள்ளிக்கிழமை முதல் நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரை நடக்க உள்ளது. அத்துடன் ஜூன் 21 ஆம் திகதி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஜூன் 5 ஆம் திகதி, சந்திரகிரகணம் இரவு 11:15 மணிக்கு தொடங்கி ஜூன் 6 ஆம் திகதி 2:34 மணி வரை நீடித்து முடிகிறது.

இந்த கிரகணம் ஸ்ட்ரா பெரி மூன் கிரகணம் (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது. பகுதி சந்திர கிரகணமாக நிகழும் இந்த நிக்ழவின் போது 57 வீதம் நிலவு மறைக்கப்படும் என வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவிக்கின்றது.

இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக் பிராந்தியம், தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகள், அத்திலாந்திக், இந்திய பெருங்கடல், அண்டாட்டிக்கா

ஆகிய இடங்களில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி நடக்க உள்ளது. இந்த நிகழ்வு காலை 10.16 மணிக்கு தொடங்கி காலை 11.49க்கு உச்சமடைகிறது. பின்னர் மதியம் 1.30க்கு இந்த கிரக ணம் விடுபடுகிறது. மொத்தம் 3 மணி நேரம் 14 நிமிடங்கள், 24 விநாடி வரை நீடிக்கிறது. இ ந் த சூ ரி ய கி ர க ண ம் இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தெற்கு சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தி யோப்பியா, கொங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகள், தென்கிழக்கு ஐரோப்பாவில் நாம் காண முடியும்.
Powered by Blogger.