மாணிக்கக்கல் ஒன்றை பெற்றுத்தருவதாகக் கூறி கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

கடந்த வருடம் செப்டெம்பர் 5ஆம் திகதி குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பெண், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பேலியகொடை மேல்மாகாணம் வடக்கு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்