Header Ads

Breaking News
recent

நாட்டின் சில பகுதிகளில் மழை!!!



மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததாக எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்தார்.

காற்றினால், அக்கரைப்பற்று பஸ் டிப்போ வளாகத்தில் இருந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் 3 பஸ்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய  செய்தியாளர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.