Header Ads

Breaking News
recent

மூதூர்-மட்டக்களப்பு பிரதான வீதியில் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்!!!


(தோப்பூர் சல்மான்) 
தோப்பூரைச் சேர்ந்த மௌலவி, அல் ஹாபிழ் ஜே.அஹ்ஸன் வயது (24) மோட்டார் சைக்கிள் விபத்தில் வபாத்தானார்.

இன்று மாலை தோப்பூரிலிருந்து மூதூருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது 64 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து அம்பியுலன்ஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இவ் இளைஞர் வபாத்தாகியுள்ளார்.

தோப்பூரைச் சேர்ந்த ஜவாஹிர் ஆசிரியர் (நளீமி) அவர்களின் இரண்டாவது புதல்வரான ஜே.அஹ்ஸன் குர்ஆனை சுமந்த அல்ஹாபில், மௌலவி ஆகிய பட்டங்களை நிறைவு செய்தவராவார்.அத்தோடு தென்கிழக்கு பல்கலை கழகத்தில் 03 ஆம் வருடத்தில் கல்விகற்று வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.