கட்டாக்காலி மாடுகள் பிரதான வீதிகளில் நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பிரயாணிகள் விசனம்!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் அதிகமான கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதால் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்
மாடுகள் இரவுகளில் நடுவீதியில் நடமாடுவதால் விபத்துக்களுக்கும், வாகன நெரிசல் உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்
ஒவ்வொரு நாளும் பகல் வேளைகளிலும் இரவு நேரங்களிலும் மாடுகள் வீதிகளில் நடமாடுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது
எனவே சம்பந்தப்பட்ட மாட்டு உரிமையாளர்கள் மாட்டினை வீதிகளில் நடமாடுவதை கட்டுப்படுத்தாது மீறும் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கின்றனர்