நாய்களுக்கு விஷம் ஊற்றி கொலை!

(உஸ்மான்)
கலேவெல அலுத்வெவ பிரதேசத்தில் விஷ மூட்டப்பட்ட நிலைமையில் 10 நாய்கள் கொல்லப் பட்ட சம்பவம் இன்று (24)ஆம் திகதி பதிவானது. இதுகுறித்து பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
குறித்த தினத்தில் (24) ஆங்காங்கே நாய்களின் உடல்கள் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து பிரதேசவாசிகள் இவ்வாறு போலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஆராய்ந்து பார்க்கையில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த நாய்களே இவ்வாறு இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
கலேவெல அலுத்வெவ பகுதியில் மிருக வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் மூலமே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தினம் தினம் நாய்கள் கொல்லப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் மிருக வளர்ப்பு உரிமையாளர்கள் துன்புறுத்துவதாக மிரட்டியதாகவும் பிரதேசவாசிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்னும் அடித்து மற்றும் துவக்கினால் சுடுவது மூலமாகவும் நாய்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக குறிப்பிட்டனர்.
தொடர்ந்து நிகழ்ந்து வந்த இச்சம்பவம் தொடர்பில் இன்று (24) பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் பரிசோதனையை மேற் கொண்டுள்ளனர் அதன்படி சந்தேகத்திற்கிடமானவர்களை நாளை 25ஆம் திகதி 9 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். மேலும் அமானுஷ்யமான செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் மீண்டும் நாட்டில் இவ்வாறான அணியாயம் நடைபெறாமல் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதேசவாசிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் செய்வதாகவும் பொலீஸார் கூறியுள்ளனர்.

