பின்னவல யானை சரணாலயப் பகுதியில் விடுதி திறப்பு!!!

ரம்புக்கன இப்பகுதியில் அமைந்துள்ள பின்னவல அனாதை யானைகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக விடுதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது
மேற்குறித்த விதியானது உலக வங்கி நிதி உதவியுடன் நகர மேம்பாட்டு அமைச்சு மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் இயங்கி வரும் வீடமைப்பு திட்டத்தின் மூலம் இன்று 2020 ஜூன் 24ஆம் திகதி பரிபாலன திற்காக ரம்புக்கனை பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டது
பின்னவல அனாதை யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இளைப்பாறும் தளமாகவே இவ்விடுதி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்
கட்டிடத் திறப்பு நிகழ்வில் ரம்புக்கனை பிரதேச சபையின் செயலாளர் திரு அதுல ஹந்தகம மற்றும் பிரதேச சபையின் உப செயலாளரும் கலந்து கொண்டுள்ளனர் மேலும் அரச ஊழியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


