கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்த 106 வயது தாய்...!

இதுவரை அதனை தடுப்பதற்கு மருத்துவம் இன்றி நாடுகள் தவிப்பில் கிடக்கின்றன.
ஆனால் பிரித்தானியாவில் வசித்து வரும் 106 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்துள்ளார்.
இவர் தனது ஆறாவது வயதில் இதே போன்றதொரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் இன்றி கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.