Header Ads

Breaking News
recent

வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் ஒருவன் பலி!!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா கிலாசோ ஆர்.டி ஒன்று என்ற பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி தப்பித்து செல்ல முற்பட்டபோது சாரதியை கைது செய்து நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நானுஒயா பகுதியில் இருந்து கிலாசோ மேற்பிரிவு தோட்டப் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி மீண்டு நானுஒயாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை 75அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் பின்னால் சென்ற இளைஞனே உயிர் இழந்துள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் நானுஒயா பெரகும்பர பகுதியைச் சேர்ந்த கே.யோகேஸ்வரன் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.
Powered by Blogger.