கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பங்கள் 2020!

கலைத்துறையில் விசேட பங்களிப்பு வழங்கி வரும் 2020.12.15 ஆம் திகதி 60 வயதினை பூர்த்தி செய்துள்ள முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து கலாபூஷண அரச விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருகின்றது.
விண்ணபப் படிவங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையதள முகாரியான www.muslimsffairs.gov.lk மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் 2020.07.27 ஆம் திகதிக்கு முன்னர்
" பணிப்பாளர் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல.180 டீ.பீ. ஜாயா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
பிரதேச செயலாளரின் சிபாரிசு செய்யப்படாத விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனதிற்கொள்க.
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்