2020 பாராளுமன்ற தேர்தலின் வாக்காளர்களுக்கான அறிவித்தல் !!!!
எதிர்வரும் 2020 பாராளுமன்ற தேர்தலின்போது வாக்களிக்க செல்பவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள கீழ் குறிப்பிடப்படும் அடையாள அட்டைகளில் ஒன்றை கொண்டு சென்று தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
1) தேசியஅடையாளஅட்டை
2)சாரதிஅனுமதிப்பத்திரம்
3) செல்லுபடியான கடவுச்சீட்டு
4 )முதியோர் அடையாள அட்டை
5)மதகுருக்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
6) ஓய்வூதிய அட்டை
மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் கிராம உத்தியோகத்தரிடம் 2 போட்டோக்களுடன் சென்று தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும் இறுதித் திகதி 2020 /07/29 ஆம் திகதி குறிப்பு :-தேசிய அடையாள அட்டை யினை புதிதாக பெற மற்றும் காணாமல் போனதற்காக, புதுப்பிப்பதற்காக, விண்ணப்பித்த மைக்கு கிராம உத்தியோகத்தர்கள் வழங்கப்படும் பற்றுச்சீட்டு வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
