Header Ads

Breaking News
recent

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பாரிய அளவிலானோருக்கு கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாக இருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சற்று முன்னர் சுகாதார பணிப்பாளர் அணில் ஜாசிங்க இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

அந் புனர்வாழ்வு நிலையத்தில் ஊழியர்கள் உட்பட 450 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இன்று காலை மாரவில பிரதேசத்தை சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலைத்தில் ஆலோசகராக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Powered by Blogger.