Header Ads

Breaking News
recent

தற்காலிகமாக மூடப்பட்ட முக்கிய புகையிரத நிலையம்!

உனவட்டுன புகையிரத நிலையமானது இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஹபராதுவ பகுதிக்கு வந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து குறித்த புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, மேலும் சுகாதார பிரவினரின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் உனவட்டுன புகையிரத நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார்.

இதன் பின்னர் புகையிரத நிலைய அதிபர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே உனவட்டுன புகையிரத நிலையம் இன்று தற்காலிமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உனவட்டுன ரயில் நிலையத்திற்கான கிருமி நீக்க நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளடன், பதில் புகையிரத நிலைய அதிபரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.