போலியான நகையினை காட்டி தங்க சங்கிலி கொள்ளை!!
பொகவந்தலாவ நகரில் தங்க நகைகள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் போலியான நகையினை காட்டி தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையடித்து சென்ற சந்தேக நபர்கள் மூவரை பொகவந்தலாவ பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் அவர்கள் பயணித்த காரொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது,காரொன்றில் வந்த நபர் பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு தங்க நகை ஒன்றினை கொள்வனவு செய்வது போல் வந்து போலியான நகையை சூட்சுமமாக கொடுத்து தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் சீ.சீ.டிவி கெமராவில் பதிவாகியிருந்தற்கு அமைவாக குறித்த சபர் போலியான நகையை வைத்து இத்திருட்டில் ஈடுபட்டதாக ஆதரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் பினனர் பொகவந்தலாவை பொலிஸார் விரைந்து சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன் அவர்களது வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றது.


