Header Ads

Breaking News
recent

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் !!!

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடிய நிலையில், அவரை கண்டுபிடிப்பதற்காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இராணுவமும் களமிறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இன்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.