Header Ads

Breaking News
recent

தீவிரமாகும் கொரோனா தொற்று : மேலும் 10 பேர் அடையாளம்...


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3010 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 135 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.