Header Ads

Breaking News
recent

25 வீடுகளை கொள்ளை அடித்த ஒருவர் கைது

 வீரகெட்டிய, ஹின்பொத்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 30 தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ரக துப்பாக்கியும் மற்றும் 1 கிராம் 610 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.



இது தொடர்பில் 34 வயதான ஹின்பொத்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வீடுகளை கொள்ளை அடித்தமை தொடர்பில் 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 11 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Powered by Blogger.