Header Ads

Breaking News
recent

யாழ். முழங்காவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 யாழ்ப்பாணம் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 120 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையிலேயே, குறித்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.