சிங்கராஜ வனத்தை ஊடறுக்கும் வீதியை 90 நாளில் புனரமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!!!
சிங்கராஜ மழைக்காடுகளை ஊடறுத்து அமைக்கப்பட்ட வீதி பணிகளை இன்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, பாதுகாக்கப்பட்ட வனம் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் 90 நாட்களுக்குள் நெலுவ-லங்காகம வீதியை புனரமைத்து முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த வீதி பணியினால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதை சுற்றுச்சூழல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டின.
அது கருத்தில் எடுக்கப்படாமல் போன, யுனிசெப்பிற்கு இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, வீதிப்பணிகளை தற்காலிகமாக நிறுத்த ஜனாதிபதி பணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
