Header Ads

Breaking News
recent

அவுஸ்திரேலியாவில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள்!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் திங்கட்கிழமை காலை வரையான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரங்களில் 19 பேர் மரணமடைந்துள்ளனர்.

எனினும் விக்டோரியா மாநிலத்தில் தினசரி புதிய நோய்த்தொற்று நோயாளர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

எனவே, முடக்கல்களை சற்றுத் தளர்த்தி வெளியே சிக்கியுள்ளவர்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்குமாறு மாநில முதல்வர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ஏறக்குறைய 5 மில்லியன் மக்கள் வசிக்கும் மெல்போர்ன் நகரம் ஜூலை தொடக்கத்தில் இருந்து முடக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இன்று காலை செய்தியாளா்களிடம் கருத்து வெளியிட்ட விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், எனினும் சமூக முடக்கல்களைத் தளர்த்துவதற்கான கால எல்லையை உடனடியாகத் தீா்மானிக்க முடியாது எனக் கூறினார்.
Powered by Blogger.