ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!!!!
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நிதியுதவி வழங்கி ஒத்துழைத்ததாக குற்றம் சுமத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தம்மை கைது செய்ய எடுத்துள்ள முயற்சியைத் தடுத்து இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
புவனேக அளுவிகாரே, எல். டீ. பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
