Header Ads

Breaking News
recent

இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு!!!


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, அனைத்து பள்ளிவாசல்களின் வளாகத்தையும் முன்னர் போலவே முழு நேரமும் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

பள்ளிவாசல்களில் அமைந்துள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிப்பறைகளை வழிபாட்டாளர்களின் பாவனைக்காக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தண்ணீர் தொட்டிகளை தொடர்ந்தும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார அதிகாரியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் அனுமதிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் உள்ளூர் பொது சுகாதார பரிசோதகர்களின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Powered by Blogger.