Header Ads

Breaking News
recent

கைதுசெய்யப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்றா ?

 

மன்னாரில் கைதுசெய்யப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்ய பிரஜை கைதுசெய்யப்பட்டார்.


அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.


குறித்த ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று தொடர்பான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இன்று குறித்த அறிக்கை மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.


குறித்த அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரை மிரிகானா ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.டினேசனினால் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.


குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ரஷ்ய பிரஜை சொந்த நாட்டுக்கு மிரிகானா ஊடாக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Powered by Blogger.