தர்மச்சக்கர வழக்கு முடிவுக்கு வந்தது : மசாஹிமா விடுதலை.
மசாஹிமாவுக்கெதிரான தர்மச்சக்கர வழக்கு இன்று 17.08.2020ம் திகதி திங்கட்கிழமை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமாஅதிபரின் ஆலோசனைப்படி இவ்வழக்கை கொண்டு நடாத்த முடியாததால் மசாஹிமா விடுதலை செய்யப்பட்டார்.
இன்ஷா அல்லாஹ் நாம் பொருந்திக் கொண்டமைக்கமைய இவ்வழக்கைப் போன்றே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அவலைப் பெண்ணுக்கான நஷ்டயீட்டை எவ்விதமான கட்டணங்களுமின்றி அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மூலம் பெற்றுக்கொடுப்போம்.
