Header Ads

Breaking News
recent

மது போதையில் கைதுசெய்யப்பட்ட நபர் தப்பியோட முயற்சி : சந்தேக நபர் கைது !!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓட முயன்ற போது தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்த முடியாத நிலையில் வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபரை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அவர் தப்பியோட முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை- கிவுலான வீதியைச் சேர்ந்த யூ. எம். முஸ்பீர் (31வயது) உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் விபரங்களை திரட்டி வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.