Header Ads

Breaking News
recent

வெளிநாடு செல்வதற்கு தடை!

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை

தலைமறைவாகி உள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரைக் கைது செய்வதற்கு 4 விசேடகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அண்மையில் அறுவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் மீள் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது
Powered by Blogger.