மஸ்ஜிதுல் அக்ஸா வின் குப்பதுஸ்ஸஹ்றா வடிவினால் ஆன மஸ்ஜித் : கிழக்கு மாகாணத்தில் !!!
இது வேறொரு நாட்டில் உள்ள மஸ்ஜித்தின் தோற்றமோ, பலஸ்தீன் மஸ்ஜிதோ இல்லை. இலங்கை - காத்தான்குடியில் அமையப்பெற்றிருக்கும் மஸ்ஜிதுல்அக்ஸா வின் குப்பதுஸ்ஸஹ்றா வடிவினால் ஆன மஸ்ஜித். பிரமிக்கத்தக்க கட்டிட அமைப்பும், கட்டடக்கலை வடிவமைப்பும்,அங்கு பதிக்கப்பட்டுள்ள பளிச்சென்ற அழகு பளிங்குக் கற்கள் கண்கவர் அழகிய தோற்றமும் உண்மையில் பலஸ்தீனில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, குப்பதுஸ் ஸஹ்றாவை நினைவூட்டுகின்றன.
அதன் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்படியான ஒரு மஸ்ஜித் உருவாவதற்கு காரணகர்த்தாவாக இருந்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்.கலாநிதி.MLAM.ஹிஸ்புல்லாஹ்.MA அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.




