Header Ads

Breaking News
recent

Facebook களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 28 பேர் கைது!!


காலி – அக்மீமன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் பேஸ்புக் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களில் 6 பேரிடமிருந்து 12 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மாத்தளை, அநுராதபுரம், மொறட்டுவை, அம்பாறை மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை மற்றும் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று(30) காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Powered by Blogger.