10 புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் – பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான அனைத்து சூழலும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலை தொடர்பான அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
