Header Ads

Breaking News
recent

கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் : 18 பேருக்கு வழக்கு!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வழக்குகள் நேற்றிரவு (05) தொடக்கம் இன்று அதிகாலை வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச்சென்ற சந்தேகத்தின் பெயரில் 32 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் கோமரங்கடவல-கல்கடவல பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர். 

அத்துடன் பக்மீகம மற்றும் அடம்பன பகுதிகளில் கஞ்சா போதைப்பொருள் மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 17 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் தொடர்பில் முன் குற்றங்கள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா பற்றிய விபரங்களை திரட்டி வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.