Header Ads

Breaking News
recent

இலங்கையில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று!!!

நாட்டில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,253 ஆக அதிகரித்துள்ளது.

அதில் ஒருவர் இன்று உயிரிழந்த கொரோனா தொற்றாருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 06 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 05 பேர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த நால்வருக்கும் கட்டார், வியட்நாட் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒவ்வொருவருக்கம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 235 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.