Header Ads

Breaking News
recent

மதில் விழுந்ததில் 2 வயது சிறுவன் மரணம்!!!!


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதில் விழுந்ததில் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் முள்ளிப்பொத்தானை- யூனிட் - 08 பகுதியைச் சேர்ந்த நசீர் முஸ்ரிப் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- உடைந்திருந்த மதிலுக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மதில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.