Header Ads

Breaking News
recent

2021ம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப்படுவர்!!!!


உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று வைரஸ் இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. 

உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பின்னோக்கிச் செல்லும் நிலையில் 2021ம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. அமைப்பு வேதனையான கருத்தை தெரிவித்துள்ளது.




ஐ.நா. மகளிர் மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுகளால் வருகின்ற 2021ம் ஆண்டில் பெண்கள், சிறுமிகள் என 4.7 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என வேதனை தெரிவித்துள்ளது. 

வறுமை கோட்டிற்கு மேலே அவர்களை கொண்டு வந்ததற்கான பல ஆண்டுகால வளர்ச்சி நிலை மீண்டும் பின்னோக்கி செல்ல கூடிய சூழல் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

இவற்றில் கொரோனா தொற்று பாதிப்புகளால், தெற்காசியாவில் பெண்களின் வறுமை விகிதம் 2021ம் ஆண்டில் அதிகரிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆண்களை காட்டிலும் பெண்களில் 25 முதல் 34 வயதுடையவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் வறுமை நிலையை அடைவார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.