Header Ads

Breaking News
recent

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அமுல்படுத்தப்படுமா ?

 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி சட்டத்தரணி இந்திக கால்லகே உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில திருத்தங்கள், இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாகக் காணப்படுவதுடன், அவை நிறைவேற்றப்பட்டால் மக்களின் இறையாண்மைக்கு பாரிய தீங்கு ஏற்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படாது, பொதுமக்கள் அபிப்பிராயத்துடன் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.