அதிபரை இடமாற்றம் செய்யும்வரை எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பபோவதில்லை : பெற்றோர்கள் எதிர்ப்பு நடவடிக்கை!!!!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் வெளி ஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றம் செய்யும்வரை எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பபோவதில்லையென கோரி வியாழக்கிழமை 03/09 பாடசாலைக்கு அனுப்பவில்லையென பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் தரம் 11ல் கல்விபயிலும் மாணவனை அதிபர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிஒயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் எமது பாடசாலைக்கு வரகூடாது என வலியுறுத்தியும் சிவபிரகாசம் என்ற அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் .
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குறித்த அதிபரை மாணவன் ஒருவரை தாக்கியமை தொடர்பிலும் பாசாலை அதிபர் செய்த ஊழல்கள் தொடர்பிலும் குறித்த அதிபர் எமக்கு வேண்டமென ஹட்டன் வலயகல்வி பணிமனைக்கு மனு ஒன்று வழங்கி கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை அதிபர் குறித்து ஹட்டன் வலயகல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
அதன் காரனமாகவே தான் எமக்கு ஒரு தீர்வு கிட்டும்வரை தாம் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப போவதில்லையென தெரிவித்து மாணவர்களை பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை இருந்த போதிலும் மலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு இன்றய தினம் இரண்டு மாணவர்கள் மாத்திரம் வருகைதந்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றைய தினம் குறித்த அதிபரை தவிர ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் தந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் எஸ். சிறீதரனை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. இருந்த போதிலும் மலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.