வாகன ஓட்டுநர்களுக்களான அறிவித்தால்
இன்று முதல் வீதியின் வலது பக்க நிரலில் மாத்திரம் பஸ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்த வேண்டும் என்று சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதி நிரலைத் தவிர்த்து வீதி முழுவதிலும் செல்வதினாலே வாகன நெரிசல் ஏற்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
