Header Ads

Breaking News
recent

சின்னத்திரை பிரபலம் சபரிநாத் மரணம்

 மலையாள டி.வி சேனல்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரிநாத். இவர் அமலா, மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 


இந்நிலையில் நேற்றைய முன் தினம் மாலை வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது சபரிநாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 43 வயதே ஆன நடிகர் சபரிநாத்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 
சபரிநாத்தின் திடீர் மறைவு மலையாள சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Powered by Blogger.