Header Ads

Breaking News
recent

பாடசாலை மாணவர்களின் பரீட்சைகள் நடை பெறும் திகதிகள் மற்றும் விடுமுறை திகதிகள் பற்றி கல்வி அமைச்சு அறிவிப்பு!

 அடுத்த வருடம் ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.



க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படும். 

க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் பெப்ரவரி 1 முதல் மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை - ஒக்டோபர் 11 ஆம் திகதி

க.பொ. த உயர் தரப் பரீட்சைகள் - ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 வரை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் - ஜனவரி 18 ஆம் திகதி முதல்; ஜனவரி 27 ஆம் திகதி வரை

இதற்கேற்ப ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்

மூன்றாம் தவணை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையாவதுடன், வருட இறுதி விடுமுறை டிசம்பர் 24 முதல் 2021 ஜனவரி 4 ஆம் திகதி வரையாகும்.

Powered by Blogger.